உத்தர பிரதேசம்-டெல்லி ரெயிலில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த நபர்..!


உத்தர பிரதேசம்-டெல்லி ரெயிலில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த நபர்..!
x
தினத்தந்தி 6 Oct 2023 9:37 PM IST (Updated: 6 Oct 2023 9:39 PM IST)
t-max-icont-min-icon

உத்தர பிரதேசம்-டெல்லி ரெயிலில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் இருந்து டெல்லி வரை செல்லும் சம்பார்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்த பெண் பயணி மீது, அந்த ரெயில் பயணம் செய்து கொண்டிருந்த மற்றொரு நபர் சிறுநீர் கழித்துள்ளார். இது குறித்து உடனடியாக சக பயணிகள் அந்த ரெயிலில் இருந்த டிக்கெட் பரிசோதகரிடம் தகவல் அளித்தனர்.

இதையடுத்து ஜான்சி ரெயில் நிலையத்தில் ரெயில்வே அதிகாரிகள், பெண் பயணி மீது சிறுநீர் கழித்த நபரை கைது செய்து அழைத்துச் சென்றனர். அந்த நபரின் பெயர் ரித்தேஷ் என்பதும், சம்பவத்தின்போது அவர் மதுபோதையில் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக ரித்தேஷ் மீது ரெயில்வே சட்டம் பிரிவு 145-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story