திருவாடானையில் மாரத்தான் ஓட்டப்பந்தயம்


திருவாடானையில் மாரத்தான் ஓட்டப்பந்தயம்
x
தினத்தந்தி 18 Jun 2023 6:45 PM GMT (Updated: 18 Jun 2023 6:45 PM GMT)

திருவாடானையில் நடந்த மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை போலீஸ் துணை சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானையில் ராமநாதபுரம் மாவட்ட சேது சீமை பட்டாளம் சார்பில் கல்வான் பள்ளத்தாக்கில் வீர மரணம் அடைந்த வீர் சக்ரா பழனியின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. தாலுகா அலுவலகம் முன்பு தொடங்கிய மாரத்தான் போட்டியை திருவாடானை துணை சூப்பிரண்டு நிரேஷ், வீர் சக்ரா பழனியின் தந்தை காளிமுத்து ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த போட்டியில் 50-க்கும் மேற்பட்ட பெண்களும் 200-க்கும் மேற்பட்ட ஆண்களும் கலந்து கொண்டனர். ஆண்களுக்கான 7 கிலோமீட்டர் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் தூத்துக்குடி அஜித்குமார் முதல் பரிசும், ஸ்ரீவைகுண்டம் பாரதிநாதன் இரண்டாம் பரிசும், தூத்துக்குடி சக்திவேல் மூன்றாம் பரிசும் பெற்றனர். இதே போல் 5 கிலோ மீட்டர் தூரம் பெண்களுக்கான மாரத்தான் போட்டியில் பரமக்குடியைச் சேர்ந்த மைக்கேல் பெல்சியா முதல் பரிசையும், மரிய ஸ்டேபினா 2-ம் பரிசையும், மதுமிதா 3-ம் பரிசையும் பெற்றனர்.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் நினைவு பரிசுகளை துணை சூப்பிரண்டு நிரேஷ், வீர் சக்ரா பழனியின் தந்தை காளிமுத்து, சகோதரர் இதயக்கனி, சேது சீமை பட்டாளத்தைச் சேர்ந்தவர்கள் வழங்கினர். கலந்து கொண்ட அனைவருக்கும் பழனியின் உருவம் பொறித்த மெடல் அணிவிக்கப்பட்டது.

இப் போட்டியில் உச்சிப்புளியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான ராஜசேகரன் கலந்து கொண்டார் அவருக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு நிரேஷ் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.


Related Tags :
Next Story