தியாகி இமானுவேல்சேகரன் நினைவு தினம்: பள்ளி, கல்லூரிகளுக்கு 11-ந்தேதி விடுமுறை
தியாகி இமானுவேல்சேகரன் நினைவு தினத்தையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு 11-ந்தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் வருகின்ற 11-ந் தேதி நடைபெற உள்ள தியாகி இமானுவேல் சேகரன் 66-வது நினைவு தினத்தை முன்னிட்டு அன்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி தாலுகாக்கள், ஒன்றியங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும், இதர கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறையை அளித்தும், அதற்கு பதிலாக வருகிற 23-ந்தேதி அன்று பள்ளிகள், கல்லூரிகள், இதர கல்வி நிறுவனங்கள் இயங்கிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதே போல் 11-ந்தேதி கீழடியில் உள்ள அருங்காட்சியகத்துக்கும் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story