மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
வாய்மேட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாகப்பட்டினம்
வாய்மேடு:
வாய்மேட்டில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் அம்பிகாபதி தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில், கடந்த மூன்று மாதங்களாக 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காததை கண்டித்து, மாவட்ட செயற்குழுவை சேர்ந்த வேணு, மாவட்ட நிர்வாக குழுவைச்சேர்ந்த பன்னீர்செல்வம், ஒன்றியக்குழுவை சேர்ந்த இளையபெருமாள், மாதர்சங்க ஒன்றிய தலைவர் சுமதி, செயலாளர் லதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story