மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Oct 2023 12:15 AM IST (Updated: 21 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருமருகல்

திருமருகல் தபால் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் பாபு தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் லெனின் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், கடந்த மூன்று மாதங்களாக 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காததை கண்டித்து, விவசாய சங்க மாவட்ட பொருளாளர் பாண்டியன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் பாரதி, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் காரல்மார்க்ஸ், வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் பாலு ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

சிக்கல்

நாகை அருகே சிக்கல் கீழவீதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நாகை வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுபாஷ் சந்திரபோஸ், மாவட்ட குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் குமார், மார்க்ஸ், சிந்தன் மற்றும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் உள்ளிட்ட கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டனர்.

இதேபோல் கீழ்வேளூரில் கீழவீதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் அபுபக்கர் தலைமை தாங்கினார். இதில் நாகை மாவட்ட செயலாளர் மாரிமுத்து, மாவட்ட குழு உறுப்பினர்கள் துரைராஜ், சுபாதேவி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story