மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
உளுந்தூர்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.
உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊ.செல்லூர் கிராமத்தில் தலித் மாணவ-மாணவிகளை தாக்கியவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யக்கோரியும், ஊ.செல்லூர் கிராமத்தில் இருந்து அரசு பஸ்சில் உளுந்தூர்பேட்டைக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரியும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆனந்தன், ஏழுமலை, சுப்ரமணியன், செந்தில், அலமேலு, பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் வரவேற்றார். மாநில குழு உறுப்பினர் ரமேஷ் பாபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் நிர்வாகிகள் ஆறுமுகம், சீனிவாசன், அய்யனார், சேகர், ரகுராமன், தேவி, சக்தி, சின்னராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.