மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்லில் மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், மத்திய அரசை கண்டித்து திண்டுக்கல் நாகல்நகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு நகர செயலாளர் அரபுமுகமது தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், ஒன்றிய செயலாளர் சரத்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராணி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கல்யாணசுந்தரம், பெருமாள், ஆஷாத், அஜாய்கோஷ் உள்பட கலந்து கொண்டனர்.
இதேபோல் பழனியில் பெரியார் சிலை சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு நகர்குழு உறுப்பினர் அன்னலட்சுமி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமசாமி, நகர செயலாளர் கந்தசாமி, மாவட்ட குழு உறுப்பினர் பகத்சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது, சி.ஏ.ஜி. அறிக்கையில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் ரூ.7.5 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதாகவும், அதனை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.