மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்
x

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்

தோகைமலையில் உள்ள கருப்பகோவில் தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு கிளைச்செயலாளர் துரைராஜ் தலைமை தாங்கினார். தோகைமலை ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட குழு உறுப்பினர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தோகைமலையில் காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தில் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தோகைமலை பஸ் நிலையத்தில் கட்டி முடிக்கப்பட்ட கழிவறையை உடனடியாக திறக்க வேண்டும்,

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும், இருசக்கர வாகன நிறுத்தம் கட்ட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. பின்னர் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தோகைமலை ஊராட்சி தலைவர் தனமாலினி கந்தசாமி, துணைத்தலைவர் சக்திவேல் ஆகியோரிடம் மனு கொடுத்தனர்.


Next Story