ராட்சத அலையில் இழுத்து செல்லப்பட்ட சிறுமி மாயம்


ராட்சத அலையில் இழுத்து செல்லப்பட்ட சிறுமி மாயம்
x

7 வயது சிறுமி ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி,

கோடை விடுமுறையை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர். இந்நிலையில் தேங்காய்பட்டினம் கடற்கரையில் பிரேமதாஸ் என்பவர் தனது 7 வயது மகள் ஆதிஷாவுடன் கடற்கரையில் நின்றபோது இருவரும் ராட்சத அலையில் சிக்கினர்.

பிரேமதாஸை அருகில் இருந்த மக்கள் மீட்ட நிலையில் ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுமி ஆதிஷா மாயமானார். ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுமி ஆதிஷாவை மீனவர்கள் உதவியுடன் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 7 வயது சிறுமி ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story