ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம்
விக்கிரமசிங்கபுரத்தில் ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் மூன்றுவிளக்கு திடலில் ம.தி.மு.க. சார்பில் தமிழக கவர்னர் ரவியை திரும்ப பெற வலியுறுத்தி மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடந்தது. நெல்லை மாவட்ட ம.தி.மு.க. எம்.எல்.எப். பொருளாளர் கணேசமூர்த்தி தலைமை தாங்கினார். அம்பை நகர செயலாளர் மைதீன்கான், பொதுக்குழு உறுப்பினர்கள் சிவகுருநாதன், சிவானந்தம், ஜெயபால், நகர துணைச் செயலாளர்கள் ஜஸ்டின், கந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை செயற்குழு உறுப்பினர் முத்துசாமி முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.
இதில் தி.மு.க. நகர துணைச் செயலாளர் இசக்கி, பொருளாளர் ரவி, சங்கரநாராயணன் மற்றும் காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் செல்லத்துரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு இசக்கி ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து வருகிற 5-ந் தேதி சந்தன மாரியம்மன் கோவில் அருகிலும், 9-ந் தேதி தாய்சீனிஸ் திரையரங்கம் அருகிலும், 16-ந் தேதி பாபநாசத்திலும் கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது.