பழனியில் நாளை இறைச்சி கடைகள் மூடல் - நகராட்சி ஆணையர் உத்தரவு


பழனியில் நாளை இறைச்சி கடைகள் மூடல் - நகராட்சி ஆணையர் உத்தரவு
x

குடமுழுக்கு விழாவையொட்டி பழனி நகராட்சியில் நாளை ஒருநாள் மட்டும் இறைச்சி கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல்,

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடாக போற்றப்படும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 27-ந்தேதி(நாளை) குடமுழுக்கு நடத்தப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து தைப்பூசத் திருவிழாவும் நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு தற்போது பழனியில் குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குடமுழுக்கு விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் வருகிற 27-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் பழனி முருகன் கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி நாளை ஒருநாள் மட்டும் பழனி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளை மூட நகராட்சி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Next Story