மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்


மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்
x

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது.

கரூர்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை இணைந்து 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. முகாமினை மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:- தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் மறு வாழ்வுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கரூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும் சமக்ரசிக்ஷாவுடன் இணைந்து 18-வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, மாற்றுத்திறனாளி என்பதற்கான மருத்துவச் சான்றிதழ் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை பதிவு மற்றும் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பதிவு ஆகியவை மேற்கொள்ளப்படும். இந்த உதவிகளை பெறுவதற்கு ஒவ்வொரு பதிவிற்கும் தனித்தனியாக புகைப்படம் -4, குடும்ப அட்டை நகல் (அல்லது) ஆதார் அட்டை நகல் (அல்லது) இருப்பிட சான்று ஆகியவை கொண்டு வரவேண்டும். ஏற்கனவே மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற்றவர்களுக்கு உதவி உபகரணங்கள் மாத உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, வங்கி கடன், மற்றும் பிற அரசு உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பங்களும் ஆலோசனைகளும் வழங்கப்படும். கரூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் இச்சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு பயன் பெறலாம், என்றார்.


Next Story