மருத்துவ முகாம்


மருத்துவ முகாம்
x

பாளையங்கோட்டையில் மருத்துவ முகாம் நடந்தது.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை பெருமாள்புரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நேற்று நடந்தது. மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தனர்.

முகாமில் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர், உப்பு கரைசல் போன்றவை வழங்கப்பட்டது. மேலப்பாளையம் மண்டல தலைவர் கதீஜா இக்லாம் பாசில்லா, சுகாதார குழு தலைவர் ரம்ஜான் அலி, கவுன்சிலர்கள் நித்திய பாலையா, சுந்தர், வில்சன் மணிதுரை, மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா, சுகாதார அலுவலர் அரசகுமார், ஆய்வாளர் முருகன் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், டெங்கு தடுப்பு களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் மேலப்பாளையம் மண்டலம் 53-வது வார்டு பகுதிகளில் சாலை பணிகளை மேயர், துணை மேயர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வட்டார போக்குவரத்து அலுவலக ரோட்டில் திருமண மண்டபம் அருகில் சிறு பாலம் கட்டி, சாலை விரிவாக்கம் செய்யவும், அய்யப்பா நகர் பஸ் நிறுத்தம் அருகில் மழைநீர் வடிகால் அமைத்து சிறுபாலம் கட்டவும், என்.ஜி.ஓ 'பி' காலனி 8-வது குறுக்கு தெருவில் தார்சாலை அமைக்கும் பணி, கழிவுநீர் ஓடை கட்டும் இடம், பள்ளிவாசல் ரோட்டில் மழைநீர் வடிகால், டிரைவர் காலனியில் தார்சாலை அமைக்கவும் ஆய்வு நடத்தப்பட்டது. செயற்பொறியாளர் வாசுதேவன், இளநிலை பொறியாளர் ஞானசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Next Story