திருப்புவனத்தில் மருத்துவ முகாம்
திருப்புவனத்தில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது
திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் தலைமை தாங்கினார். மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார் முகாமை தொடக்கி வைத்து பேசினார். முகாமில் சிவகங்கை மருத்துவ கல்லூரி முதல்வர் சத்தியபாமா, திருப்புவனம் தாசில்தார் கண்ணன், யூனியன் ஆணையாளர் அங்கயற்கன்னி, பேரூராட்சி செயல்அலுவலர் ஜெயராஜ், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சேதுராமு, ஒன்றிய செயலாளர் கடம்பசாமி, நகர் செயலாளர் நாகூர் கனி, பேரூராட்சி துணை தலைவர் ரகமத்துல்லாகான், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் சித்ராதேவி, பேரூராட்சி உறுப்பினர்கள் மாரிதாசன், வேல்பாண்டி, பத்மாவதி முத்துக்குமார், ராமலட்சுமி பாலகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை மருத்துவ கல்லூரி சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். இதில் 200 பேருக்கு காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டது. இலவச கண்ணாடி 200 பேருக்கு வழங்கப்பட்டது. முகாமில் சுமார் 1500 பேர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.