மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்
காவேரிப்பாக்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் இன்று நடக்கிறது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடக்கிறது.
முகாமில் கை, கால் ஊனமுற்ற, மூளை வளர்ச்சி குன்றிய அனைத்து வயது நிரம்பிய மாற்றுத்திறனாளிகளுக்கும் மருத்துவம் பார்க்கப்பட உள்ளது. மேலும் மூன்று சக்கர சைக்கிள்கள், ஊன்றுகோல்கள், சக்கர நாற்காலிகள், செயற்கை கால்கள், காலிபர்கள் உள்ளிட்டவைகளை இலவசமாக பெற பதிவும் நடைபெறவுள்ளது.
எனவே மாற்றுத்திறனாளிகள் இந்த முகாமில் கலந்துகொண்டு பயன் அடையலாம் என்று கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story