நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்
அரக்கோணத்தில் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.
அரக்கோணம் ரோட்டரி சங்கம் மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து அரக்கோணம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் டவுன் ஹாலில் நடைபெற்றது. ரோட்டரி சங்க தலைவர் மணிகண்டன், செயலாளர் மனோகர் பிரபு, ரோட்டரி சங்க மருத்துவ பிரிவு இயக்குனர் வெங்கடேஷ், ரோட்டரி நிர்வாகி பிரதீப்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். நகராட்சி ஆணையர் லதா முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்க பொங்கல் விழா சேர்மன் டி.எஸ்.ரவிக்குமார் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக நகர மன்ற தலைவர் லட்சுமி பாரி கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் தூய்மை பணியாளர்கள், ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சுமார் 250-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு உடல் பரிதோனை மற்றும் சிகிச்சை பெற்றனர். நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள், சுகாதார அலுவலர் மோகன், சுகாதார ஆய்வாளர்கள் சுதாகர், ஸ்ரீகாந்த், வனஜா உள்பட ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.