தோடர் இன மக்களுக்கு மருத்துவ முகாம்
ஊட்டியில் தோடர் இன மக்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது.
ஊட்டி
தோடர் சமுதாய முன்னேற்ற சங்கம் சார்பில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தோடர் இன மக்களுக்கான இலவச மருத்துவ முகாம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது. முகாைம ஊட்டி ஆர்.டி.ஓ. மகாராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நீலகிரி ஆதிவாசிகள் நல சங்க செயலாளர் ஆல்வாஸ் வரவேற்றார். இதில் கோவையை சேர்ந்த டாக்டர்கள் கலந்துகொண்டு, மக்களுக்கு பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் 6 வகையான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். முதல் கட்டமாக தோடர் இன மக்களுக்காக மருத்துவ முகாம் நடந்தது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பழங்குடியின மக்களுக்காகவும், அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றனர். இதில் மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், தோடர் சமுதாய முன்னேற்ற சங்க தலைவர் மன்தேஸ்குட்டன், செயலாளர் சத்தியராஜ், தோடர் நல்வாழ்வு சங்க செயலாளர் ஸ்ரீகாந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர்.