கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் - அமைச்சர்  மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 14 July 2022 7:10 AM GMT (Updated: 14 July 2022 7:24 AM GMT)

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

சென்னை,

முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் மு.க.ஸ்டாலின் தனிமைப்படுத்திக் கொண்டார்

இந்த நிலையில் 2 நாட்கள் தனிமைபடுத்தி கொண்டிருந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சென்னை, காவேரி மருத்துவமனைக்கு சி.டி.ஸ்கேன் மருத்துவ பரிசோதனைக்கு சென்ற நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கொரோனா தொடர்பான அறிகுறிகள் குறித்து மு.க ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது என காவேரி மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story