மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Oct 2023 6:45 PM GMT (Updated: 9 Oct 2023 6:46 PM GMT)

பணி நிரந்தரம் செய்யக்கோரி மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்

ஆர்ப்பாட்டம்

நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு மக்களை தேடி மருத்துவ பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கீதா தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை செயலாளர் அன்பழகன், மாவட்ட குழு உறுப்பினர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் தங்கமணி பேசினார்.

மக்களை தேடி மருத்துவ பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். ஊக்கத்தொகை ரூ.2 ஆயிரம் அனைவருக்கும் காலதாமதம் இன்றி வழங்க வேண்டும்.

அடையாள அட்டை

பணி நேரம், பணிகளை வரையறை செய்ய வேண்டும். ஆன்லைன் தொடர்பான பணிகளுக்கு கைபேசி, பேட்டரி செலவுகளை வழங்க வேண்டும். சீருடை, அடையாள அட்டை, மழைகோர்டு, ஸ்டேஷனரி பொருட்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் 100- க்கும் மேற்பட்ட மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story