பஸ் கண்ணாடி உடைத்தவரை கட்டி வைத்து தாக்கும் வீடியோ வைரல்


பஸ் கண்ணாடி உடைத்தவரை கட்டி வைத்து தாக்கும் வீடியோ வைரல்
x

பஸ் கண்ணாடி உடைத்தவரை கட்டி வைத்து தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

காஞ்சிபுரம்

மாங்காடு அடுத்த பட்டூரில் பஸ் நிலையம் உள்ளது. இங்கிருந்து தினமும் அரசு பஸ்கள் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பட்டூர் பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிராட்வே செல்லும் அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடியை அந்த வழியாக சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட 40 வயது மதி்க்கத்தக்க நபர் கல்லால் தாக்கி உடைத்துள்ளார். இதில் கண்ணாடி முழுமையாக சேதம் அடைந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் பஸ்சில் இருந்து அலறியடித்தபடி வெளியே ஓட்டம் பிடித்தனர். கண்ணாடியை உடைத்து விட்டு சென்ற அந்த நபரை அங்கு இருந்த பஸ் டிரைவர்களும், கண்டக்டர்களும் மடக்கி பிடித்து சாலையில் தர, தரவென இழுத்து சென்று கயிறால் கட்டி வைத்து தாக்கியுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பஸ் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து மாங்காடு போலீஸ் நிலையத்தில் பஸ் கண்டக்டர் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story