இன்று முதல் சென்னையில் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில் சேவை..!
பயணிகளின் காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்காக 2 வழித்தடங்களிலும் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. தினமும் ஏராளமானோர் மெட்ரோ ரெயிலில் பயணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, அவர்களின் காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்காகவும் 2 வழித்தடங்களிலும் நெரிசல் மிகு நேரங்கள் இல்லாது மற்ற நேரங்களில் 9 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வந்த மெட்ரோ ரெயில் சேவைகள் இன்று முதல் 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மெட்ரோ ரெயில் பயணிகள் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது.
Related Tags :
Next Story