திருச்சியில் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவை: சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்


திருச்சியில் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவை: சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும்  பணி தீவிரம்
x

கோப்புப்படம் 

மெட்ரோ ரெயிலுக்காக திருச்சியின் முக்கிய இடங்களில் மண் பரிசோதனை முடியும் நிலையில் இருப்பதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருச்சி,

திருச்சியில் 68 கி.மீ தொலைவுக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ளதாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சமயபுரத்திலிருந்து ஸ்ரீரங்கம், சத்திரம் பேருந்து நிலையம், தில்லைநகர் வழியாக வயலூர் வரை 18.7 கி.மீ தொலைவுக்கு ஒரு வழித்தடம் அமைக்கப்படும். துவாக்குடியிலிருந்து திருவெறும்பூர், பால்பண்ணை, மத்திய பேருந்து நிலையம் வழியாக பஞ்சப்பூர் வரை 26 கி.மீ தொலைவுக்கு இரண்டாவது வழித்தடம் கண்டறியப்பட்டுள்ளது.

அடுத்ததாக ஜங்சனிலிருந்து பஞ்சப்பூர், ஏர்போர்ட், புதுக்கோட்டை சாலை வழியாக மாத்தூர் பகுதியிலுள்ள ரிங்ரோடு வரை 23.3 கி.மீ தொலைவுக்கு ஒரு வழித்தடம் அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரெயிலுக்காக திருச்சியின் முக்கிய இடங்களில் மண் பரிசோதனை முடியும் நிலையில் இருப்பதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மெட்ரோ ரெயில் நிறுத்தங்கள், வழித்தடம் குறித்து விரிவாக திட்ட அறிக்கையின்போது தெரியவரும்.


Next Story