மெட்ரோ ரெயில் பணி: சென்னையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்.!


மெட்ரோ ரெயில் பணி: சென்னையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்.!
x

மெட்ரோ பணிகள் நடைபெறுவதால், இந்த போக்குவரத்துமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

மெட்ரோ ரெயில் பணி காரணமாக சென்னை மேடவாக்கத்தில் இன்றும்தல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேடவாக்கம்கூட்டுசாலை சந்திப்பு- சோழிங்கநல்லூர் சந்திப்பு வரை மெட்ரோ பணிகள் நடைபெறுவதால், இந்த போக்குவரத்துமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக செம்மொழி சாலை வழியாக தாம்பரம், மாம்பாக்கம் செல்லும் வழியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மாம்பாக்கம் சாலை, வேளச்சேரி பிரதான சாலை வழியாக தாம்பரம் நோக்கி செல்லும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


Next Story