மெட்ரோ ரெயில் பணிகள்: சென்னையில் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம்


மெட்ரோ ரெயில் பணிகள்: சென்னையில் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம்
x
தினத்தந்தி 14 March 2024 5:53 AM GMT (Updated: 14 March 2024 6:04 AM GMT)

சென்னை ஆயிரம் விளக்கு ஒயிட்ஸ் சாலை பகுதியில் இன்று முதல் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

சென்னை,

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்ட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இன்று முதல் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி,

* சென்னை ஆயிரம் விளக்கு ஒயிட்ஸ் சாலை பகுதியில் இன்று முதல் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

* பட்டுலாஸ் சாலை - ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் இருந்து ஒயிட்ஸ் சாலை - திரு.வி.க சந்திப்பு வரை வாகனங்களுக்கு அனுமதி இல்லை.

* ராயப்பேட்டை மணிக்கூண்டில் இருந்து அண்ணா சாலை நோக்கி ஒயிட்ஸ் சாலையில் வரக்கூடிய வாகனங்கள், பட்டுலாஸ் சாலை- ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் இருந்து திரும்பி செல்ல வேண்டும்.

* அண்ணா சாலையில் இருந்து ஸ்மித் சாலையில் வரும் வாகனங்கள் ஸ்மித் சாலை - ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்ப தடை செய்யப்பட்டுள்ளது.


Next Story