மேட்டுப்பாளையம்-நெல்லை வாராந்திர ரெயில் சேவை டிசம்பர் 26-ந்தேதி வரை நீட்டிப்பு


மேட்டுப்பாளையம்-நெல்லை வாராந்திர ரெயில் சேவை டிசம்பர் 26-ந்தேதி வரை நீட்டிப்பு
x
தினத்தந்தி 27 Nov 2023 3:34 PM IST (Updated: 27 Nov 2023 5:14 PM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையம்-நெல்லை இடையேயான வாராந்திர ரெயில் சேவை நீட்டிப்பு பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை,

மேட்டுப்பாளையம்-நெல்லை இடையே வாராந்திர ரெயில் நெல்லையில் இருந்து ஞாயிறு தோறும் புறப்பட்டு, அடுத்த நாள் காலை மேட்டுப்பாளையத்துக்கு செல்லும். இதே போல மேட்டுப்பாளையத்தில் இருந்து திங்கள்தோறும் புறப்படும் ரெயில், அடுத்த நாள் நெல்லைக்கு செல்லும். இந்த ரெயில் சேவை இன்று வரை (27-ந்தேதி) நடைமுறையில் இருக்கும் என்று சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து இந்த ரெயில் சேவையை நிரந்தரமாக இயக்க பயணிகள் கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் மேட்டுப்பாளையம்-நெல்லை இடையேயான வாராந்திர ரெயில் சேவை அடுத்த மாதம் டிசம்பர் 25-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் வெளியிட்டு உள்ளனர்.

இருமார்க்கங்களிலும் செல்லும் இந்த ரெயில்கள் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர், கோவையில் நின்று செல்கின்றன. மேட்டுப்பாளையம்-நெல்லை இடையேயான வாராந்திர ரெயில் சேவை நீட்டிப்பு தென்மாவட்ட பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story