மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x

மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சேலம்,

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி நிர்வரத்து 85 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனிடையே மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

இதனால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கக் கூடும் என்பதால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story