மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 12,500 கன அடியாக சரிவு


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 12,500 கன அடியாக சரிவு
x

அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக 120 அடியாக நீடிக்கிறது.

மேட்டூர்,

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது. தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் தீவிரம் குறைந்துள்ளது.

இதனால் மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 17,500 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 15,500 கன அடியாக சரிந்தது. தொடர்ந்து நேற்று மாலை 4 மணி அளவில் மேலும் நீர்வரத்து 12,500 கன அடியாக சரிந்தது. இன்றும் அதே அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து விநாடிக்கு 15,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் நீர்வரத்து குறைந்துள்ளதால் 12,500 கன அடி தண்ணீர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. அதன்படி டெல்டா பாசனத்துக்கு 12000 கன அடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாயில் 500 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளன.

அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக 120 அடியாக நீடிக்கிறது.


Next Story