எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவிப்பு
அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, நெல்லையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, நெல்லையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அ.தி.மு.க. தொடக்க விழா
அ.தி.மு.க. பொன் விழா நிறைவு மற்றும் 51-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு நெல்லை மாவட்ட அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து சிலையின் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்துக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, தேர்தல் பணிக்குழு துணை செயலாளர் இன்பதுரை, அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், ஏ.கே.சீனிவாசன், பொருளாளர் சவுந்திரராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆர்.பி.ஆதித்தன், ரெட்டியார்பட்டி நாராயணன், கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஓ.பன்னீர்செல்வம் அணி
அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் வக்கீல் சிவலிங்கமுத்து தலைமையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
ஜெயலலிதா பேரவை மாநில இணை செயலாளர் முத்துகுமார், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் குபேந்திரன் மணி, அவைத்தலைவர் பரமசிவன், நிர்வாகிகள் சுந்தர்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ரெட்டியார்பட்டி- களக்காடு
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி, பாளையங்கோட்டை ஒன்றியம், ரெட்டியார்பட்டி ஊராட்சி, அரியகுளம் ஊராட்சி பகுதிகளில் நாங்குநேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் கட்சி கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். மேலும் கட்சி மூத்த நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவம் செய்தார்.
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளரும், முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவருமான பி.நாராயணபெருமாள் களக்காட்டில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவ படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ஜெயராமன், வேலுச்சாமி, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அம்பை
அம்பை நகர அ.தி.மு.க. சார்பில் அம்பை பூக்கடை பஜாரில் அலங்கரிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்களுக்கு நகர அ.தி.மு.க. செயலாளர் அறிவழகன் தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினர்.
நிகழ்ச்சியில் மணிமுத்தாறு முன்னாள் நகரப்பஞ்சாயத்து தலைவர் சிவன் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அம்பை வனத்துறை அலுவலகம் அருகில் மற்றும் பஸ்நிலையம் அருகில் கட்சி கொடியேற்றப்பட்டது.
முன்னாள் எம்.பி.யும், நெல்லை மாவட்ட அ.தி.மு.க. பொருளாளருமான சவுந்தரராஜன் நெல்லையில் நேற்று ஆட்டோ தொழிலாளர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.