அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவமனையில் அனுமதி


அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவமனையில் அனுமதி
x

கோப்புப்படம்

உடல்நலக்குறைவு காரணமாக அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவமனையில் அனுமதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், உணவு ஒவ்வாமை காரணமாக வயிறு வலி ஏற்பட்டதால் சிகிச்சைக்காக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடல்நிலை சீரானதும் நாளை காலை அமைச்சர் அன்பில் மகேஸ் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

முன்னதாக தமிழ்நாடு முழுக்க அனைத்து தொகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு வந்த நிலையில், தொடர் சுற்றுப்பயணத்தின் காரணமாக உணவு ஒவ்வாமை ஏற்பட்டு இருக்கலாம் என்றும், அதன் காரணமாக லேசான வயிறு வலி ஏற்பட்டதாக அமைச்சரின் உதவியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story