அரசு பள்ளியில் அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி ஆய்வு


அரசு பள்ளியில் அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி ஆய்வு
x
தினத்தந்தி 19 July 2023 12:15 AM IST (Updated: 19 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ரிஷிவந்தியம் அருகே அரசு பள்ளியில் அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார்.

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்,

ரிஷிவந்தியம் அருகே வாணாபுரத்தில் இயங்கிவரும் கஸ்தூரிபாய் காந்தி பாலிக வித்யாலயா உண்டு உறைவிட பள்ளியில் தங்கி படித்து வரும் மாணவிகளின் வசதிக்காக அங்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் மூலம் ரூ.95 லட்சம் மதிப்பில் 4 கூடுதல் வகுப்பறையுடன் கூடிய விடுதி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனை இன்று (புதன்கிழமை) அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதையொட்டி பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி புதிதாக கட்டப்பட்டுள்ள 4 கூடுதல் வகுப்பறையுடன் கூடிய விடுதி கட்டிடத்தை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அதே பகுதியில் இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளியிலும் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த 1-ம் வகுப்பு மாணவர்களிடம் பாடப்புத்தகத்தை வாசிக்க சொல்லி அவர்களின் கல்விதிறனை ஆய்வு செய்தார், பின்னர் அதன் அருகில் இயங்கி வரும் உண்டு உறைவிடப்பள்ளி மாணவர்களிடமும் கல்வித்தரம் குறித்து ஆய்வு செய்தார், அப்போது மாணவர்கள் செய்த கைவினைப்பொருட்களை பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, ஒன்றிய தி.மு.க.செயலாளர்கள் பெருமாள். துரைமுருகன், பாரதிதாசன், ஒன்றியக்குழு துணை தலைவர் அண்ணாதுரை மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.


Next Story