அரித்ராநதி தெப்பக்குளத்தில் படகு இல்லம் அமைக்கும் பணி அமைச்சர் ஆய்வு
அரித்ராநதி தெப்பக்குளத்தில் படகு இல்லம் அமைக்கும் பணியை அமைச்சர் ஆய்வு செய்தார்.
திருவாரூர்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரித்ராநதி தெப்பக்குளத்தில் படகு இல்லம் அமைக்கப்படும் என அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்து இருந்தார். இதனையடுத்து படகு இல்லம் அமைக்கும் பணி குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் குளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்தூரி, மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, உதவி கலெக்டர் கீர்த்தனாமணி, தாசில்தார் கார்த்தி, நகரசபை தலைவர் மன்னை சோழராஜன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story