திருவண்ணாமலையில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு


திருவண்ணாமலையில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 22 Oct 2023 6:45 PM GMT (Updated: 22 Oct 2023 6:46 PM GMT)

திருவண்ணாமலையில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை அமைச்சர் கே.என.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை அமைச்சர் கே.என.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

'டான்காப்'

திருவண்ணாமலை திண்டிவனம் சாலையில் பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த வேளாண்மைத் துறையின் கீழ் உள்ள 'டான்காப்' நிறுவனத்திற்கு சொந்தமான 6.83 ஏக்கர் இடம் புதிய பஸ் நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்டது.

இந்த இடத்தில் இருந்த பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு ரூ.30 கோடியே 15 லட்சம் மதிப்பில் திருவண்ணாமலை நகராட்சி நிர்வாகத்தின் மூலம் புதிய பஸ் நிலையம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

bஅதேபோல் நகராட்சிக்கு சொந்தமான காந்திநகர் பைபாஸ் பகுதியில் உள்ள 2.67 ஏக்கர் காலியிடத்தில் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2022-23-ன் கீழ் ஒருங்கிணைந்த காய்கறிச்சந்தை, பூச்சந்தை, பழக்கடைகள் அமையக்கூடிய வணிக வளாகம் ரூ.29 கோடியே 25 லட்சத்தில் கட்டப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் நேற்று காலை திருவண்ணாமலையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் புதிய பஸ் நிலையம் மற்றும் வணிக வளாகத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது நகராட்சி அலுவலர்களிடம் நடைபெற்று வரும் பணியின் விவரங்களை கேட்டறிந்தார்.

மேலும் இந்த பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். ஆய்வின்போது வேலூர் மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் தனலட்சுமி, மண்டல செயற்பொறியாளர் சுப்பிரமணியன், நகராட்சி ஆணையாளர் தட்சிணாமூர்த்தி, பொறியாளர் நீலேஸ்வர் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story