துணை முதல்-அமைச்சர் பதவி குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி


துணை முதல்-அமைச்சர் பதவி குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
x

மக்களும், திமுகவினரும் எதிர்பார்த்ததை முதல் அமைச்சர் நிறைவேற்றிக் கொடுத்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை,

அமைச்சராக இருந்துவரும் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. அவர் இன்று மாலை பதவியேற்க உள்ளார். அவருக்கு திமுக கூட்டணி கட்சி தலைவர்கள், அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், துணை முதல் அமைச்சர் அறிவிப்பு குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டியில் கூறியதாவது;

தமிழ்நாடு மக்களும், திமுகவினரும் எதிர்பார்த்ததை முதல் அமைச்சர் நிறைவேற்றிக் கொடுத்துள்ளார். வாரிசு அரசியலில் இல்லாதவர்கள் உதயநிதி நியமனம் குறித்து கேள்வி கேட்கலாம். விமர்சிப்பவர்கள் வாரிசு அரசியலில் இருக்கிறார்களா என பார்க்க வேண்டும். என்றார்.

1 More update

Next Story