ஈரோட்டில் 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டம் - மலை கிராமங்களில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு


ஈரோட்டில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் - மலை கிராமங்களில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு
x

மலைவாழ் மக்களுக்கு முழுமையான மருத்துவம் வழங்கப்படுகிறதா என்பது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டறிந்தார்.

ஈரோடு,

தமிழக அரசின் 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டம் குறித்து தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஈரோடு மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்களில் ஆய்வு செய்தார். தாமரைக்கரை முதல் எலச்சிபாளையம் வரையிலான பகுதிகளில் நடைபயணம் மேற்கொண்ட அவர், அங்குள்ள மலைவாழ் மக்களுக்கு முழுமையான மருத்துவம் வழங்கப்படுகிறதா என்பது குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து நோயாளிகளுக்கு மருந்துகள் அடங்கிய பெட்டகத்தை வழங்கினார். மேலும் மலைவாழ் மக்கள் அவசர மருத்துவ சிகிச்சையினை பெறுவதற்காக தொடர்பு கொள்ளும் வகையில், அப்பகுதி செவிலியருக்கு உடனடியாக கைப்பேசி ஒன்றை வழங்கவும் உத்தரவிட்டார்.

1 More update

Next Story