"ஆ.ராசா இந்து வரலாற்றைத் தான் கூறினார்" - அமைச்சர் பொன்முடி


ஆ.ராசா இந்து வரலாற்றைத் தான் கூறினார் - அமைச்சர் பொன்முடி
x

சென்னை அம்பத்தூரில் திமுக விழாவில் அமைச்சர் பொன்முடி, சேகர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சென்னை:

சென்னை கிழக்கு மாவட்ட திமுக அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி மற்றும் வடக்கு பகுதி சார்பில் திமுக முப்பெரும் விழா 2022 சுயமான சுடர் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர் பாபு, பொன்முடி ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர்.பாலு, நாஞ்சில் சம்பத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். அப்போது பேசிய அமைச்சர் பொன்முடி

இந்து வரலாற்றை தான் ஆ.ராசா கூறினார். யார் மனதையும் புண்படுத்த வேண்டும் எனும் நோக்கத்தில் கூறவில்லை. எங்களுக்கு எல்லா மதமும் ஒன்று.

ஆனால் ஒரு மதத்தின் பெயரால் கடவுளின் பெயரால் ஏற்றத்தாழ்வு ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக தந்தை பெரியார் கடவுள் இல்லை எனக்கூறினார். அதன் விளைவாக தான் இன்று தமிழகத்தில் சமூகநீதி சமத்துவம் வளர்ந்திருக்கிறது என கூறினார்.

1 More update

Next Story