அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் மனு சென்னை ஐகோர்ட்டில் நாளை விசாரணை


அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் மனு சென்னை ஐகோர்ட்டில் நாளை விசாரணை
x

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் 2-வது முறையாக செந்தில்பாலாஜி மனு தாக்கல் செய்தார்.

சென்னை,

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் 31-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 17-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் 2-வது முறையாக செந்தில்பாலாஜி மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு சென்னை ஐகோர்ட்டில் நாளை (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வருகிறது.


Next Story