கமல்ஹாசனுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து


கமல்ஹாசனுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
x
தினத்தந்தி 7 Nov 2023 11:52 AM IST (Updated: 7 Nov 2023 12:06 PM IST)
t-max-icont-min-icon

இன்று பிறந்தநாள் கொண்டாடும் கமல்ஹாசனுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

"திரையுலக கனவுகளோடு வருபவர்களுக்கு மட்டுமல்ல, எல்லாத் தரப்பினரையும் ரசிக்க செய்யும் உலக நாயகன் கமல்ஹாசன் சார் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால், கலைஞானி என்று போற்றப்பட்ட கமல் சார், இந்திய திரையுலகின் முக்கிய அடையாளம் என்பது நமக்கெல்லாம் பெருமை. கலைத்துறையின் முன்னேற்றத்திற்காக மட்டுமின்றி, அரசியல் - சமூகநீதி தளங்களிலும் அவரது பங்களிப்பு போற்றுதலுக்குரியவை." இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story