சென்னையில் அண்ணாவின் உருவப்படத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை


சென்னையில் அண்ணாவின் உருவப்படத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை
x

அண்ணாவின் உருவப்படத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செய்தார்.

காஞ்சிபுரம்,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் அண்ணாவின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணா உருவப்படத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செய்தார். மேலும், அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் அண்ணா உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

1 More update

Next Story