காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் மீது மர்ம நபர்கள் கல் வீச்சு...!


காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் மீது மர்ம நபர்கள் கல் வீச்சு...!
x

ரெயில் நேற்று மைசூரில் இருந்து புறப்பட்டு சென்னை சென்டிரல் நோக்கி வந்து கொண்டிருந்தது.

சென்னை,

காவேரி எக்ஸ்பிரஸ் ரெயிலானது கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் வரை இயக்கப்படும் தினசரி ரெயில் ஆகும்.

இந்நிலையில், இந்த ரெயில் நேற்று மைசூரில் இருந்து புறப்பட்டு சென்னை சென்டிரல் நோக்கி வந்து கொண்டிருந்தது. ரெயிலானது திருவொற்றியூர் அருகே வந்து கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் சிலர் கற்களை வீசி தாக்கியுள்ளனர். இதனால் பயணிகள் அலறினர். இந்த சம்பவத்தில் 7 ரெயில் பெட்டிகளின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்துள்ளன. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாரும் பாதிக்கப்படவில்லை.

இந்த சம்பவத்தினால் ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்படவில்லை. ரெயிலானது சென்டிரல் ரெயில் நிலையம் வந்து சேர்ந்தது. இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

1 More update

Next Story