திருமாவளவனின் தாயார் உடல்நலம் குறித்து தொலைபேசியில் விசாரித்த முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
திருமாவளவனின் தாயார் உடல்நலம் குறித்து தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் விசாரித்தறிந்தார்.
சென்னை,
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் தாயார் உடல்நலம் குறித்து தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் விசாரித்தறிந்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், தனது தாயாரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 8 மணியளவில் திருமாவளவனை தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு, அவரது தாயாரின் உடல்நலம் குறித்து விசாரித்தறிந்து, விரைவில் குணமடைந்து வீடு திரும்ப தனது விருப்பத்தை தெரிவித்தார்.
இதுகுறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "இன்று காலை எட்டு மணியளவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அம்மாவின் உடல்நலம் குறித்து விசாரித்தார். முதல்வர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி" என்று கூறியுள்ளார்.