ஆட்டோ டிரைவரிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு


ஆட்டோ டிரைவரிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு
x
தினத்தந்தி 6 May 2023 12:30 AM IST (Updated: 6 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர்- அலசநத்தம் சாலையில் உள்ள பிஸ்மில்லா நகரை சேர்ந்தவர் முத்தாசீர் (வயது 21). ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 3-ந் தேதி கொத்தூர் கிராமம் அருகில் பயணிகளை இறக்கி விட்டு திரும்ப வந்து கொண்டிருந்தார். அப்போது ஓசூர் மகாலட்சுமி நகர் 100 அடி சாலையில் வந்தபோது இயற்கை உபாதை கழிப்பதற்காக முத்தாசீர் ஆட்டோவை நிறுத்தினார். அப்போது 20 வயது மதிக்கத்தக்க 3 பேர் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர். பின்னர் அவர்கள் முத்தாசீரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.4 ஆயிரத்து 500 மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்து அவர் ஓசூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் தேடி வருகின்றனர்.


Next Story