தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி கடலூர் என்ஜினீயரிடம் ரூ.3½ லட்சம் மோசடி மனிதவள மேம்பாட்டு அதிகாரி என்று கூறி ஏமாற்றியவர் மீது வழக்கு


தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி  கடலூர் என்ஜினீயரிடம் ரூ.3½ லட்சம் மோசடி  மனிதவள மேம்பாட்டு அதிகாரி என்று கூறி ஏமாற்றியவர் மீது வழக்கு
x

கோவை தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, கடலூர் என்ஜினீயரிடம் ரூ.3½ லட்சம் மோசடி செய்ததோடு, மனித வள மேம்பாட்டு அதிகாரி என்று கூறி ஏமாற்றிய நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடலூர்


கடலூர்,


கடலூர் வன்னியர்பாளையம் இளம்வழுதிநகரை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவருடைய மகன் ராஜேஷ் (வயது 30). என்ஜினீயரான இவர் ஆன்லைனில் வேலை தேடி வந்தார். அப்போது கோவை மதுக்கரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மனித வள மேம்பாட்டு அதிகாரியாக வேலை செய்து வருவதாக கூறி விவேக் என்பவர் ராஜேஷிடம் செல்போனில் பேசி உள்ளார்.

அதையடுத்து அவர் தங்களது நிறுவனத்தில் முதன்மை என்ஜினீயர் வேலை காலியாக உள்ளதாகவும், அதை ராஜேசுக்கு வாங்கி தருவதாக கூறிய, அவர் அதற்காக பணம் தர வேண்டும் என்று பேசி உள்ளார். இதை நம்பிய அவர் 27.5.2022 முதல் 8.6.2022 வரை விவேக் என்பவருக்கு ஆன்லைன் மூலம் கொஞ்சம், கொஞ்சமாக மொத்தம் ரூ.3 லட்சத்து 49 ஆயிரத்து 298 அனுப்பி உள்ளார்.

மோசடி

இதை வாங்கிய அவர், மேலும் ரூ.1½ லட்சம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்த ராஜேஷ் கோவைக்கு சென்று, அங்குள்ள நிறுவனத்தில் விவேக் பற்றி விசாரித்துள்ளார். அதற்கு அந்த நிறுவனம் அப்படி யாரும் தங்கள் அலுவலகத்தில் வேலை செய்யவில்லை என்று கூறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் இதுபற்றி விவேக்கிடம் பேச முற்பட்டபோது, அவர் தனது செல்போனை சுவிட்சு ஆப் செய்து விட்டார். அதன்பிறகு தான் ராஜேசை அந்த நபர் மோசடி செய்தது தெரிய வந்தது.

பின்னர் இது பற்றி ராஜேஷ் கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மோசடி செய்தல் என்ற பிரிவின் கீழ் விவேக் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story