சிதம்பரம் அருகே வீட்டுமனைப்பிரிவு விற்பனை செய்வதாக கூறி மாத தவணையில் பணம் பெற்று கோடிகணக்கான ரூபாய் மோசடி பாதிக்கப்பட்டவர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகை


சிதம்பரம் அருகே வீட்டுமனைப்பிரிவு விற்பனை செய்வதாக கூறி  மாத தவணையில் பணம் பெற்று கோடிகணக்கான ரூபாய் மோசடி  பாதிக்கப்பட்டவர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகை
x

சிதம்பரம் அருகே வீட்டுமனைப்பிரிவு விற்பனை செய்வதாக கூறி மாத தவணையில் பணம் பெற்று கோடிகணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கடலூர்


சிதம்பரம்

சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 20 நகர்களுடன் புதிய வீடடு மனைப்பிரிவு ஒன்றை உருவாக்கி விற்பனை செய்து வந்துள்ளனர்.

மேலும் இதில் மாத தவணையில் பணம் செலுத்தினால் குலுக்கல் முறையில் மாதந்தோறும் தங்கம்,வெள்ளி நகைகள் கிடைக்கும் என்றும், முழு தவணையும் கட்டி முடித்த பின்னர் மனை வழங்கப்படும் என்றும் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர்.

10 ஆண்டுகளாக பணம் கட்டினர்

இதை நம்பி, ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மாத தவணையில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் பணம் செலுத்தி உள்ளனர். மாதம் ரூ.1500 தொடங்கி ரூ. 2500 வரை பணம் செலுத்தி வந்துள்ளனர்.

10 ஆண்டுகள் கடந்தும் இதுவரை எந்த உரிமையாளர்களும் மனையையும் பதிவு செய்து கொடுக்கவில்லை. வாங்கிய பணத்தையும் பொதுமக்களிடம் திரும்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

முற்றுகை

இதையடுத்து, பணத்தை கட்டிய மக்கள் நேற்று சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வடக்கு ஒன்றிய செயலாளர் ஏ.விஜய் தலைமை தாங்கினார். போராட்டத்தில் மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாவட்ட குழு உறுப்பினர் ராஜா, பரங்கிப்பேட்டை நகர செயலாளர் வேலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

10 ஆண்டுகளாக தவணை முறையில் மக்களிடம் பணத்தை பெற்று, கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பணம் அல்லுத நிலத்தை மீட்டு தர வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

இதில், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஜெயசிலன், ஹசம் முகமது, உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோட்டாட்சியர் ரவியை சந்தித்து மனு ஒன்றையும் அவர்கள் அளித்துவிட்டு, அங்கிருந்து சென்றனர்.


Next Story