நிலா சோறு படைத்து கும்மிபாடல் பாடிய பெண்கள்


நிலா சோறு படைத்து கும்மிபாடல் பாடிய பெண்கள்
x

பழனி தைப்பூச தேர்த்திவிழா தொடங்கியதை முன்னிட்டு சேவூரில் நிலாசோறு படைத்து கும்மிபாடல் பாடி பெண்கள் வழிபட்டனர்.

திருப்பூர்


பழனி தைப்பூச தேர்த்திவிழா தொடங்கியதை முன்னிட்டு சேவூரில் நிலாசோறு படைத்து கும்மிபாடல் பாடி பெண்கள் வழிபட்டனர்.

தைப்பூசம்

பழனி மலைக்கோவிலில் தைப்பூச தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து சேவூர் அருகே முறியாண்டம்பாளையம் காமராஜ் நகரில் நிலாவுக்கு சோறு படைத்து சிறுவர், சிறுமியர்கள் மற்றும் பெண்கள் கும்மியடித்து, நிலா சோறு சாப்பிட்டு மகிழ்ந்தனர். இது குறித்து அப்பகுதி மக்களை கேட்டபோது, தேர் திருவிழா தொடங்கியதும் நிலாவை குழந்தையாக எண்ணி சோறு ஊட்டும் நிகழ்ச்சியை நடத்துகிறோம் என்றனர்.

முதல் நாளான நேற்று அவரவர் வீடுகளிலிருந்து பழம் மற்றும் சர்க்கரை கொண்டு வந்து ஊரின் நடுவே உள்ள மைதானத்தில் வண்ண வண்ண கலர்களில் கோலமிட்டு கோலத்தின் நடுவே சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து பிள்ளையாரின் தலையில் அருகம்புல், வெள்ளை ஏருக்கலாம் பூ வைத்து, அலங்கரித்து நவதானிய முளைப்பாரி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி கும்மியடித்து பாட்டுப்பாடி அனைவரும் பங்கிட்டு சாப்பிட்டு வந்தனர். தேரோட்டம் வரை தினசரி இரவு கலவை சாதம் நிலாவிற்கு படைத்துகும்மியடித்து பாட்டுப்பாடி அனைவரும் பங்கிட்டு சாப்பிட்டு வருவர்.

தேரோட்டம்

இதையடுத்து அடுத்த மாதம் 5-ந் தேதி பழனி மலை கோவில் தைப்பூச தேரோட்டத்தை முன்னிட்டு இரவு பொது இடத்தில் தேர் வரைந்து வீடுகளிலிருந்து கடலை மாவால் செய்யப்பட்ட ஒப்பிட்டு மற்றும் பலகாரங்கள், பழவகைகளை நிலாவுக்கு படைத்து வழிபட்டு அனைவரும் கும்மியடித்தும், சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பவுர்ணமி நிலாவெளிச்சத்தில் பல விளையாட்டுகளை விளையாடுவார்கள்.

7-ந் தேதி நிறைவு நாளில் தேரோட்டத்தன்று சாப்பிட்ட கடலை மாவால் செய்த பலகாரங்களால், நிலா குழந்தைக்கு ஜிரண கோளாறு பிரச்சினையை போக்க அனைவரும் வீடுகளிலிருந்து வெல்ல வெங்காயத்தால் செய்யப்பட்ட பூண்டு ரசம் சாதம் கொண்டு வந்து நிலாவுக்கு படைத்து வழிபடுவதாக தெரிவித்தனர். பிறகு தினசரி சாணத்தால் செய்த பிள்ளையாரை கூடையில் எடுத்து கன்னிப்பெண்கள் தலையில் வைத்து ஊரை சுற்றி வந்து கிணற்றில் விட்டு சாமி கும்பிட்டு தைப்பூச திருநாளை சந்தோசமாகவும், குதூகலமாகவும், மன நிறைவுடன் நிறைவு செய்வர். இந்நிகழ்வு இப்பகுதியில் பாரம்பரியம் மாறாமல் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம் என அப்பகுதி பெரியோர்கள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story