மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; 5 பேர் காயம்
தியாகதுருகம் அருகே மொபட் மீது மோட்டர் சைக்கிள் மோதிய விபத்தில் 5 பேர் காயமடைந்தனர்.accident
தியாகதுருகம்,
தியாகதுருகம் அருகே விருகாவூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் புயல்வண்ணன் (வயது 27). எலக்ட்ரீசியன். இவர் நேற்று முன்தினம் தனது மொபட்டில் தாய் எழில் செல்வியுடம் சோமநாதபுரம் கிராமத்திற்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினார். விருகாவூர் அருகே வந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மொபட் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் புயல்வண்ணன், எழில் செல்வி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த மலைக்கோட்டாலம் கிராமத்தை சேர்ந்த பூமாலை மகன் பிரசாந்த் (29) ஆகிய 3 பேரும் காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்றனர். இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.