தடுப்பு சுவரில் மோட்டார்சைக்கிள் மோதல்: 25 அடி உயர மேம்பாலத்தில் இருந்து விழுந்து அண்ணன்-தங்கை படுகாயம்


தடுப்பு சுவரில் மோட்டார்சைக்கிள் மோதல்: 25 அடி உயர மேம்பாலத்தில் இருந்து விழுந்து அண்ணன்-தங்கை படுகாயம்
x

ஆவடி அடுத்த மோரை அருகே தடுப்பு சுவரில் மோட்டார்சைக்கிள் மோதி 25 அடி உயர மேம்பாலத்தில் இருந்து விழுந்து அண்ணன்-தங்கை படுகாயம் அடைந்தனர்.

சென்னை

ஆவடியை அடுத்த கொள்ளுமேடு, விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 22). இவர் நேற்று முன்தினம் தாம்பரத்தில் உள்ள தனது சித்தி ஜோதியின் மகளான பிளஸ்-1 மாணவி பார்கவி (17) என்பவரை தாம்பரத்தில் இருந்து தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று கொண்டிருந்தார். வண்டலூர்-மீஞ்சூர் 400 அடி வெளிவட்ட சாலையில் ஆவடி அடுத்த மோரை அருகே சென்றபோது திடீரென நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள் மேம்பாலத்தில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது. இதில் அண்ணன்-தங்கை இருவரும் சுமார் 25 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்தனர். இதில் படுகாயம் அடைந்த கன்னியப்பன், பார்கவி இருவரும் வானகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story