மோட்டார் சைக்கிள் எரிப்பு; 3 பேர் கைது
பரமக்குடி அருகே மோட்டார் சைக்கிள் எரிப்பு சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பரமக்குடி,
பரமக்குடி அருகே உள்ள காமன்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சக்தி (வயது 39).இவர் நேற்று முன்தினம் இரவு அக்கிரமேசி கிராமத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அரசடிவண்டல் செல்லும் வழியில் அக்கிரமேசி கிராமத்தைச் சேர்ந்த நாகலிங்கம், சரவணன், அஜித் ஆகிய 3 பேரும் சக்தியை வழிமறித்து தாக்கி அவரது மோட்டார் சைக்கிளையும் அடித்து சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சக்தி நயினார்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று மஞ்ச கொள்ளை கிராமத்திற்கு கார்த்திக் (26), அதியமான் ஆகிய இருவரும் தனித்தனியாக மோட்டார் சைக்கிளில் சென்றனர். அவர்கள் இருவரையும் சிலர் வழிமறித்து தாக்கி அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளையும் எரித்துள்ளனர். இது குறித்து கார்த்திக் சத்திரக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். பரமக்குடி துணை சூப்பிரண்டு காந்தி நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
அதை தொடர்ந்து நாகலிங்கம(36)், வினித்குமார்(26) திவாகர்(20) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.