ஸ்ரீபெரும்புதூர் அருகே மோட்டார் சைக்கிள்- லாரிகள் மோதல்; 3 பேர் படுகாயம்


ஸ்ரீபெரும்புதூர் அருகே மோட்டார் சைக்கிள்- லாரிகள் மோதல்; 3 பேர் படுகாயம்
x

ஸ்ரீபெரும்புதூர் அருகே மோட்டார் சைக்கிள்- லாரிகள் மோதலில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரி அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது லாரி வேகமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் லாரிக்குள் சிக்கி கொண்டது. அதை தொடர்ந்து லாரிக்கு பின்னால் வந்த டேங்கர் லாரி மிக வேகமாக முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இதில் பெட்ரோலிய டேங்கர் லாரியின் முன்பக்கம் முழுவதுமாக நொறுங்கியது.

இதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் மற்றும் டேங்கர் லாரியில் இருந்த டிரைவர், கிளீனர் என 3 பேர் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். டேங்கர் லாரியில் எரிபொருள் டேங்க் முழுவதும் நிரம்பி இருந்ததால் தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விரைந்து வந்து பொக்லைன் எந்திரம் உதவியுடன் டேங்கர் லாரியை பாதுகாப்பாக அகற்றினர்.

இந்த விபத்தால் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story