மோட்டார் சைக்கிள்- லாரி மோதல்; வாலிபர் சாவு


மோட்டார் சைக்கிள்- லாரி மோதல்; வாலிபர் சாவு
x

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.

சென்னை

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 32). இவர், காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுகோட்டை பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சாலையை கடந்து செல்ல முயன்றார்.

அப்போது பின்னால் வந்த லாரி, சரவணன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசபட்டதில் பலத்த காயம் அடைந்த சரவணன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார், பலியான சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.


Next Story