மோட்டார் சைக்கிள்- லாரி மோதல்; வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள்- லாரி மோதல்; வாலிபர் பலி
x

மோட்டார் சைக்கிள்- லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.

காஞ்சிபுரம்

மோட்டார் சைக்கிள்- லாரி மோதல்

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா தென்னேரி அடுத்த அகரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் ரமேஷ்- சரிதா தம்பதி. இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். இவர்களது இளைய மகன் ராஜேஷ் (19). வாரணவாசி பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.

ராஜேஷ் மோட்டார் சைக்கிளில் வாலாஜாபாத்துக்கு சென்று விட்டு அகரம் நோக்கி வீடு திரும்பும்போது அகரம் கூட்டு சாலை பகுதியில் எதிரே வேகமாக வந்த மினி லாரி எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

சாவு

இதில் ராஜேஷ் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வாலாஜாபாத் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story